அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

Update: 2023-04-26 18:40 GMT


தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு ஒருமாத காலம் கோடை விடுமுறை வழங்குவது போல தங்களுக்கும் வழங்க வேண்டும், 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர். நேற்று முன்தினம் தொடங்கிய இந்த காத்திருப்பு போராட்டம் மாநிலம் முழுவதும் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

இதன்படி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் உமாராணி, மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமையில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட துணை செயலாளர் குருவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்நிலையில் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்