அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா

அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.;

Update: 2023-04-18 20:10 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையினர் மாவட்ட தலைவர் எஸ்தர்ராணி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தினர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒரு மாத கோடை விடுமுறை வழங்க வேண்டும். 10 வருட பணி நிறைவு செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் டெய்சி சிறப்புரையாற்றினார். பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் வாழ்த்தி பேசினர். இதில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்