அங்கநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

மடவாளத்தில் அங்கநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-12-14 17:45 GMT

திருப்பத்தூர் தாலுகா மடவாளம் கிராமத்தில் அமைந்துள்ள 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதீஸ்வர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்த 9-ந் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கணபதி பூஜை, தன பூஜை, நவகிரக பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து முதல் கால பூஜை, யாகவேள்வி, இரண்டாம் கால பூஜை, மூன்றாம், நான்காம் கால பூஜை, தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கலசத்தை எடுத்து சென்று, திருப்பத்தூர் தொகுதி ஏ. நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் 61 அடி உயரம் உள்ள ராஜகோபரத்தின் மீதும், மூலவர் அங்கநாதீஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் சிவாய நமக சிவாய நமக என பக்தி கோஷமிட்டனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் க.தேவராஜ் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் கம்பன், மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் லட்சுமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் தேவராஜன், சின்னப்பையன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வஜ்ரவேல், இந்து சமய அறநிலைத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்