அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம் நடந்தது.

Update: 2023-07-13 19:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சேத்திருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான ரத்த சோகை கண்டறியும் முகாம் நடந்தது. முகாமிற்கு கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவ அலுவலர் வைஷாலி தலைமையில், பகுதி சுகாதார செவிலியர் அருள்ஜோதி, கிராம சுகாதார செவிலியர் இந்திரா, ஆய்வக நுட்புனர் அகிலா, செவிலியர் ஆனந்தி, அங்கன்வாடி பணியாளர்கள் ராசாத்தி, இலக்கியா ஆகியோர் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். தலைமை ஆசிரியர் பாலு, ஆசிரியர்கள் சந்திரன், கணேசன், சுந்தரி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகாலட்சுமி, சுடர்மணி முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்