அந்தியூர் புதுப்பாளையம்குருநாதசாமி கோவிலில் மறுவனபூஜை

அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் மறுவனபூஜை நடந்தது.

Update: 2023-08-16 22:19 GMT

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் மறுவனபூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிடாய்கள் பலிகொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

குருநாதசாமி கோவில்

அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்திபெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்ெவாரு ஆண்டும் ஆடி மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 2-ந் தேதி முதல் வனபூஜை நடைபெற்றது. 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தேர்த்திருவிழா நடைபெற்றது.

அப்போது மடப்பள்ளியில் இருந்து வனக்கோவிலுக்கும், அங்கிருந்து மடப்பள்ளிக்கு 2 மகமேறு தேர்களையும் காமாட்சி அம்மன் பல்லக்கையும் பக்தர்கள் சுமந்து சென்றனர்.

கிடாய்கள் பலி

இதைத்தொடர்ந்து நேற்று மறுவனபூஜை நடைபெற்றது. இதையொட்டி வனக்கோவிலில் உள்ள குருநாதசாமி, பெருமாள், காமாட்சி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தனர். ஆயிரக்கணக்கான கிடாய்களும் பலிகொடுக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்