கமுதி அருகே பழங்கால கிருஷ்ணன் சிலை கண்டுபிடிப்பு

கமுதி அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தில் கிராம மக்கள் குழி தோண்டும் பழங்கால கிருஷ்ணன் சிலை கிடைத்துள்ளது.;

Update:2022-07-09 17:45 IST

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கொத்த பூக்குளம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் கிராம மக்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் கோயில் பகுதியில் பூமிக்கு அடியில் அரை அடி உயரம் உள்ள மூன்று கிலோ எடையில் தவழும் கிருஷ்ணன் சிலை கிடைத்துள்ளது.

இதனை அடுத்து அரசு அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த சிலை ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கமுதி பகுதியில் உள்ள நகை செய்யும் பொற்கொல்லரிடம் சிலையில் தன்மை குறித்து விசாரணை செய்யப்பட்டது.

இதில் அச்சிலை கல் மற்றும் பித்தலையால் ஆனது இல்லை என்றும் ஐம்பொன் சிலையாக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அச்சிலை கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சிலை கோயிலுக்கு சொந்தமானதா அல்லது மர்ம நபர்களால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என்று பல்வேறு கோணங்களில் வருவாய் துறையில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்