ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2022-09-20 06:38 GMT

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, அவர்களின் படகுகளுடன் சிங்கள கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிங்கள படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அடுத்த 2 நாட்களில் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 7-ந்தேதி கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் சில நாட்களுக்கு விடுதலையான நிலையில் அடுத்த கைது அரங்கேறியிருக்கிறது. வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் மீனவர்கள் அச்சத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.

மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிங்கள படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 100 படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்