பள்ளிப்பட்டு பகுதியில் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம்

பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி பகுதியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் செய்தார்.;

Update: 2022-07-10 15:10 GMT

சாமி தரிசனம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சியினரை சந்திக்க வந்தார். பின்னர் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

அதன் பிறகு மேட்டுத்தெரு பகுதியில் உள்ள எல்லை போராட்ட தியாகி தளபதி கே.வினாயகம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள கிராமங்களில் பா.ம.க. கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மக்களை சந்திக்கும் 2.0 திட்டத்தை பள்ளிப்பட்டு கரிம்பேட்டில் இருந்து தொடங்கி உள்ளேன்.

மக்கள் பிரச்சினை

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய உள்ளேன். தமிழகத்தை தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்தும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை.

பள்ளிப்பட்டு பகுதியில் முக்கிய தொழிலாக நெசவுத்தொழில் உள்ளது. இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நெசவு தொழில்களை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும். அ.தி.மு.க. பலம்வாய்ந்த கட்சி, உட்கட்சி பிரச்சினைகளை அவர்களே பேசி தீர்த்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்