ுத்துப்பேட்டை ஒன்றியம் கீழபெருமழை கிராமத்தில் பராமரிப்பின்றி காணப்படும் கழிவறையை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.
பொதுகழிவறை
முத்துப்பேட்டை ஒன்றியம் கீழபெருமழை கிராமத்தில் அப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் அருகில் கூட்டுறவு சங்கம், நூலகம், நெல் கொள்முதல் நிலையம் போன்றவை உள்ளது. இங்கு வருபவர்களும் இந்த பொது கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பொது கழிவறை பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் இங்கு தண்ணீர் வசதி இல்லை. சுத்தம் செய்யப்படாததால் அசுத்தமாக காட்சி அளிக்கிறது. இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது.
பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
இதனால் அப்பகுதி பொதுமக்கள் இந்த கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் இயற்கை உபாதையை கழிக்க திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் உள்ளது. எனவே பராமரிப்பின்றி காணப்படும் முத்துப்பேட்டை ஒன்றியம் கீழபெருமழை கிராமத்தில் உள்ள பொதுகழிவறையை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.