மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி பாலியல் பலாத்காரம்

நெகமம் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-09 16:20 GMT

நெகமம், 

நெகமம் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம்

கோவை மாவட்டம் நெகமம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் நேற்று முன்தினம் மாலை ஒரு தென்னந்தோப்பில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். பின்னர் மாடுகளை பட்டியில் அடைக்க சென்றார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் தனது வேட்டியால் மூதாட்டியின் முகத்தை மூடி, அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார். இதுகுறித்து மூதாட்டி தனது கணவரிடம் நடந்ததை கூறினார். தொடர்ந்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வாலிபர் கைது

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தினர். மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில் பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகராஜன் (வயது 25) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நாகராஜனை பிடித்து விசாரித்தனர். இதில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே மூதாட்டியை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்