கத்திரி வெயிலுக்கு மயங்கி விழுந்த மூதாட்டி சாவு

கத்திரி வெயிலுக்கு மயங்கி விழுந்த மூதாட்டி இறந்தார்.;

Update: 2023-05-19 19:49 GMT

திருச்சி ஜி-கார்னர் அருகே மாடு வதைக்கூடம் உள்ளது. இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி காலை 11.50 மணிக்கு கத்தரி வெயில் கொடுமை தாங்காமல் 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்