ஆடு மேய்க்க சென்ற முதியவர் ஆற்றில் பிணமாக மீட்பு

ஆடு மேய்க்க சென்ற முதியவர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.;

Update: 2023-08-12 18:51 GMT

நொய்யல் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 67). இவர் தனக்கு சொந்தமான ஆடு, மாடுகளை நேற்று முன்தினம் வழக்கம்போல் நொய்யல் பகுதியில் உள்ள வாய்க்கால் மேட்டு ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து துரைசாமியின் மகன் விக்னேஷ் அந்த பகுதியில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, துரைசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில், நொய்யல் ஆற்றில் மூழ்கி இறந்த நிலையில் துரைசாமி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் துரைசாமியின் உடலை மீட்டனர். பின்னர் வேலாயுதம்பாளையம் போலீசார் துரைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்