சைக்களிள் சென்றவர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து... ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மக்கள்
பொதுமக்கள் விரட்டியதால் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர்.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி டவுண் பகுதியில் அன்பழகன் என்ற முதியவர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று முதியவரின் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாடி கீழே விழுந்த அவரின் கால்கள் மீது பேருந்தில் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால், இரு கால்களும் உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பேருந்து வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் எனக்கூறி அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பேருந்து மீது கற்களை வீசியதுடன், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்க முற்பட்டனர்.
பொதுமக்கள் விரட்டியதால் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.