புதுச்சேரியில் இருந்து நெய்வேலிக்கு காரில் மதுபாட்டில்களை கடத்திய முதியவர் கைது

புதுச்சேரியில் இருந்து நெய்வேலிக்கு காரில் மதுபாட்டில்களை கடத்திய முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-04 18:45 GMT


நெய்வேலி, 

நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் வட்டம் 13 என்.எல்.சி.க்கு சொந்தமான அன்சோல்டா விருந்தினர் இல்லம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபாட்டிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார், காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வட்டம் 13 போர்வெல் சாலை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற என்.எல்.சி. கூலி தொழிலாளி சிவசுப்பிரமணியன் (வயது 61) என்பதும், விற்பனைக்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி காரில் கடத்தி வந்தபோது சிக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து சிவசுப்பிரமணியனை போலீசார் கைது செய்ததுடன், மதுபாட்டில்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்