மலை உச்சியில் பிணமாக கிடந்த முதியவர்

நத்தம் அருகே, மலை உச்சியில் முதியவர் பிணமாக கிடந்தார்.;

Update: 2022-11-03 17:01 GMT

நத்தம் அருகே உள்ள அழகர்கோவில் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தாம்பாடி-பெருமலை காப்புகாடு வனப்பகுதியில், வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலை உச்சியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் உமா புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் நத்தம் லிங்கவாடியை சேர்ந்த வீரணன் (வயது 77) என்று தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர் வீடு திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் தான், வீரணன் மலை உச்சியில் பிணமாக கிடந்துள்ளார். அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே வீரணன் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்