காட்டு பகுதியில் பிணமாக கிடந்த முதியவர்

எட்டயபுரம் அருகே காட்டு பகுதியில் முதியவர் பிணமாக கிடந்தார்.;

Update: 2023-05-29 19:00 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள மேலஈரால் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் பாபு தங்கள் எல்கைக்குட்பட்ட ஒரு காட்டு ்பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் இருப்பதாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்