கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடமாநில முதியவர் மயங்கி விழுந்து சாவு

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடமாநில முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2023-01-08 21:33 GMT

கன்னியாகுமரி,:

மத்தியபிரதேசம் மாநிலம் திரியாதர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்சிங் தாகூர் (வயது 72). இவருடைய மனைவி நர்மதா தாகூர். மதன்சிங் தாகூர் மற்றும் அவரது மனைவி உள்பட 120 பேர் 2 பஸ்களில் நேற்றுமுன்தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.

அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.

பின்னர், அவர்கள் கன்னியாகுமரி அடுத்த கோவளம் சன்செட் பாயிண்ட் கடலில் குளித்தனர். அதில் மதன்சிங் தாகூர் கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மதன்சிங் தாகூர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அவருடைய மனைவி மற்றும் உடன் சுற்றுலா வந்தவர்களுடன் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேேய மதன்சிங் தாகூர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி சுற்றுலா வந்த இடத்தில் வடமாநில முதியவர் மனைவி கண்எதிரே மயங்கி விழுந்த இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்