குன்றத்தூர் அருகே சைக்கிள் மீது கிரேன் மோதியதில் முதியவர் பலி
குன்றத்தூர் அருகே சைக்கிள் மீது கிரேன் மோதியதில் முதியவர் பலியானார்.;
குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கற்பகாம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது70). இவர் நேற்று வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சர்வீஸ் சாலையில் திருமுடிவாக்கம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த கிரேன் பாஸ்கரன் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன பாஸ்கரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற கிரேன் டிரைவரை தேடி வருகின்றனர்.