கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி;
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆவிணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜ கேசரி (வயது 68). இவருக்கு ஒரு புதுவீடும், சிறிது தூரத்தில் பழைய வீடும் உள்ளது. சம்பவத்தன்று தனது பழைய வீட்டுக்கு தியாகராஜ கேசரி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்ேபரில் கீழச்சிவல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.