விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
நெல்லை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.;
பாளையங்கொட்டை கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் தாழையூத்து பைபாசில் அய்யா கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் எதுவும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.