எலக்ட்ரீசியன் தவறி விழுந்து சாவு

சங்கரன்கோவிலில் எலக்ட்ரீசியன் தவறி விழுந்து இறந்தார்.

Update: 2023-10-03 20:13 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கர் நகர் 3-ம் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சங்கரநாராயணன் (வயது 38). எலக்ட்ரீஷியன். சங்கரநாராயணன் சங்குபுரம் 1-ம் தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தார். எந்திரம் மூலம் சுவர்களில் குழாய் பதிப்பதற்காக உடைத்து கொண்டு இருந்தார். அப்போது அவர் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்த (நீளமான பெஞ்ச் சரிந்து விழுந்ததில் தவறி கீழே விழுந்தார். அப்போது கீழே நீட்டிக் கொண்டிருந்த கம்பி நெஞ்சில் பாய்ந்ததால் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சங்கரநாராயணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்