செஞ்சியில்சன்மார்க்க சங்கத்தினர் விழிப்புணர்வு ஊர்வலம்அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

செஞ்சியில் சன்மார்க்க சங்கத்தினர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைெபற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றாா்.;

Update: 2023-07-16 18:45 GMT


செஞ்சி,

செஞ்சி, மேல்மலையனூர் வட்ட சன்மார்க்க சங்கம், வடலூர் வள்ளலார் கொள்கை நெறிபரப்பு இயக்கம், விழுப்புரம் அகிம்சை பிரச்சார சங்கம் ஆகியவை இணைந்து உயிர்ப்பலி தடுப்பு அகிம்சை பிரசார விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியை செஞ்சியில் நடத்தினர்.

இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கொண்டு, விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். செஞ்சி நகர சன்மார்க்க சங்க தலைவர் தணிகாசலம் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்து, உயிர்ப்பலி தடுப்பு பிரச்சார விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

பிரச்சாரத்தில் ஆடி மாதத்தில் சிறுதெய்வத்தின் பெயரால் வாய் பேசா உயிரினங்கள் பலியிடுவதை தவிர்க்க கோரி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் வழிபாடு மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த சன்மார்க்க சங்கங்களின் பஜனை, வில்லுப்பாட்டு நடைபெற்றது. தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவும், ஜோதிவழிபாடும் நடைபெற்றது.

இதில், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார்மஸ்தான், கவுன்சிலர் கார்த்தி, டாக்டர் சரவணன், சன்மார்க்க சங்க வட்டார தலைவர் முத்து கார்த்திகேயன், நகரத் தலைவர் தணிகாசலம், செயலாளர் சம்பத் மற்றும் பரத், சர்தார்சிங், கோவிந்தசாமி, தனலட்சுமி அம்மாள், சாது ஜானிகிராமன், அண்ணாமலை, செஞ்சி வருவாய் அலுவலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்