கோத்தகிரியில் காதலர் தினத்தன்று சாதி மறுப்பு திருமணம் செய்த ராணுவ வீரர்

கோத்தகிரியில் காதலர் தினத்தன்று ராணுவ வீரர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.;

Update: 2023-02-15 11:59 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் காதலர் தினத்தன்று ராணுவ வீரர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சாதி மறுப்பு திருமணம்

நாடு முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. அது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் காதலுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் சாதி மறுப்பு திருமண விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கோத்தகிரியை சேர்ந்த ராணுவ வீரர் சுகதேவ், சுஷ்மா ஜோடியினருக்கு தந்தை பெரியார் திராவிட கழக மாநில பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் முன்னிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

ஆடம்பரமின்றி...

புரோகிதர், மேள, தாளம் என எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி எளிய முறையில்திருமணம் நடைபெற்றது.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சுகதேவ் கடந்த சில வருடங்களுக்கு முன் ராணுவத்தில் சேரும் போதே சாதி இல்லை என்ற சான்றிதழை பெற்று பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கதாகும். இந்த திருமணம் அனைவரின் கவனத்தையும் ெவகுவாக ஈர்த்தது. 

Tags:    

மேலும் செய்திகள்