கல்வராயன்மலையில் மதுவிலக்கு போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்

கல்வராயன்மலையில் மதுவிலக்கு போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்

Update: 2022-06-19 17:35 GMT

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இங்குள்ள ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் பலர் சாராயம் காய்ச்சி வருகின்றனர். பின்னர் அதனை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக சின்னசேலம், கச்சிராயப்பாளையம், வரஞ்சரம், கீழ்குப்பம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் அதிக அளவில் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகர பகுதிகளை விட கிராம பகுதியில் சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கல்வராயன்மலையில்தான் சாராயம் காய்ச்சப்பட்டு மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அவ்வபோது கல்வராயன்மலையில் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மலை பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு செல்ல நீண்ட நேரம் ஆவதால் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சாராயம் வேட்டையில் ஈடுபடும்போது பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் எந்த பகுதியில் சாராயம் காய்ச்சப்படுகிறது என்ற தகவலும் அவர்களுக்கு சரியாக கிடைப்பதில்லை. இதனால் சாராயம் காய்ச்சுவதை தடுக்க முடியவில்லை. இதை தவிர்க்க கல்வராயன்மலையில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சாராயம் காய்ச்சி கடத்தி செல்வதை முற்றிலும் போலீசாரால் தடு்க்க முடியும். எனவே கல்வராயன்மலையில் மது விலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தை உடனே அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்