பழமையான ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது

பாவூர்சத்திரம் அருகே பழமையான ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2023-09-26 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் வடக்கு பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. அந்த வழியே சென்ற பொதுமக்கள் ஆலமரத்தின் அடிப்பகுதியில் புகையுடன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆலமரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தால் ஆலமரத்தின் பெரிய கிளை ஒன்று அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் மின் வயர்கள் அறுந்து 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய அலுவலர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்