ரூ.16¼ கோடி மதிப்பீட்டில் அம்ரூத் குடிநீர் மேம்பாட்டு பணிகள்

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.16¼ கோடியில் அம்ருத் குடிநீர் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-03 18:20 GMT

காவேரிப்பாக்கம், 

குடிநீர் மேம்பாட்டு பணிகள்

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.16 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்னம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு அம்ரூத் 2.0 குடிநீர் மேம்பாட்டு பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ஓராண்டுக்குள்

இத்திட்ட பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த 15,000 பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா, பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், துணைத் தலைவர் தீபிகா முருகன், ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, செயல் அலுவலர் சரவணன், காவேரிப்பாக்கம் நகர செயலாளர் பாஸ் நரசிம்மன், காவேரிப்பாக்கம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலாஜி (தெற்கு), தெய்வசிகாமணி (வடக்கு), மாவட்ட துணை செயலாளர் துரை மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திட்டப்பணிகள்

அதைத்தொடர்ந்து நெமிலி ஒன்றியத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.

அதன்படி பனப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.14 லட்சத்துக்கு 60 ஆயிரம் மதிப்பில் நெடும்புலி தொடக்க கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நெடும்புலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் கூட்டுறவு முழுநேர ரேஷன் கடையின் புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ரூ.7 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மேலபுலம் ஊராட்சியில் புதிய பகுதிநேர ரேஷன் கடையை அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் வளர்மதி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சிவமணி, சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுந்தரம்பாள் பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ரவீந்திரன் (மேற்கு), எஸ்.ஜி.சி. பெருமாள் (மத்தியம்), நெடும்புலி கூட்டுறவு சங்க செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்