வள்ளிமலையில் அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்

வள்ளிமலையில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-10 19:19 GMT

வள்ளிமலை

வள்ளிமலையில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வள்ளிமலை பகுதியில் உள்ள சி.என்.பட்டடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்து அ.ம.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் மாநகர செயலாளர் காட்பாடி ஏ.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும், மண்டல பொறுப்பாளரும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான என்.ஜி.பார்த்திபன் கலந்துகொண்டு 103 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வலியுறுத்தியும், மகளிர் குழு கடன் வழங்குவதில் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி பேசினார்.

இதில் ஏராளமான விவசாயிகள், மகளிர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்