அம்மன் கோவில் திருவிழா

கல்பட்டு கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா

Update: 2022-05-28 11:59 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகில் உள்ள கல்பட்டு கிராமத்தில் தம்டகோடி மலையில் ஊற்றுக்குட்டையம்மன் கோவிலில் 62-வது ஆண்டாக கூழ்வார்க்கும் திருவிழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி 24-ந்தேதி தண்டு மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் திருவிழாவுடன் இரவில் ஊற்றுக்குட்டையம்மனுக்கு காப்புக் கட்டப்பட்டது.

25-ந்தேதி இரவு நாடகம் நடந்தது.

26-ந்தேதி காளசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டிமன்ற நடுவர் கே.டி.எஸ். மாணிக்கவேலு மற்றும் குழுவினரின் நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது.

26-ந்தேதி அதிகாலை ஊற்றுக்குட்டையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 5 மணியளவில் அம்மன் அருள்வாக்கு கேட்டு கோவில் முன்பு கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது.

இரவில் நடன நிகழ்ச்சி, பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

விழாவில் போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்திபெருமாள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்