அணிவகுத்து நின்ற அம்மன் சப்பரங்கள்
கொக்கிரகுளத்தில் நடந்த தசரா திருவிழாவில் அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன.;
நெல்லை கொக்கிரகுளம் முத்தாரம்மன், புது அம்மன், உச்சினி மாகாளி அம்மன் கோவில்களில் நேற்று முன்தினம் தசரா விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் நள்ளிரவு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தனித்தனி சப்பரங்களில் முத்தாரம்மன், புது அம்மன், உச்சினி மாகாளி அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. நேற்று காலை புது அம்மன் கோவில் அருகே 3 சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.