வேந்தருக்கு பதிலாக அரசுக்கு அதிகாரம்: தமிழ்ப் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம்

தமிழ்ப் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-10-19 13:09 GMT

சென்னை:

தமிழக சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம்-1982-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, அந்த சட்டத்தில் வேந்தர் (கவர்னர்) என்ற சொல்லுக்கு பதிலாக அரசு என்ற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும். குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்தது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 பல்கலைக்கழகங்களின் சட்டங்களை திருத்தம் செய்வதற்காக கடந்த ஏப்ரல் 25-ந் தேதியன்று சட்டசபையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதுபோல தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம்-1982-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாக்கள் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பிற்குப் பின்னர் நிறைவேறின.

Tags:    

மேலும் செய்திகள்