அம்பை கிருஷ்ணன் கோவில் தெப்ப உற்சவம்

அம்பை கிருஷ்ணன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.

Update: 2023-08-10 21:55 GMT

அம்பை:

அம்பை கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் காசிநாத சுவாமி கோவில் மற்றும் கிருஷ்ண சுவாமி கோவில் தெப்ப திருவிழா தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் மரகதாம்பிகை சமேத காசிநாத சுவாமி கோவில் தெப்ப திருவிழா நடந்தது. காலையில் மரகதாம்பிகை, காசிநாதர் தெப்ப மண்டபத்துக்கு எழுந்தருளி, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவில், சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தை வலம் வந்தனர்.

நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ராம்குமார், ஆய்வாளர் கோமதி, தக்கார் முருகன் மற்றும் தெப்ப திருவிழா கமிட்டியினர், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று கிருஷ்ண சுவாமி கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்