அம்பை அரசு ஆஸ்பத்திரியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு

அம்பை அரசு ஆஸ்பத்திரியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2022-11-14 20:36 GMT

அம்பை:

அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, அம்பை தீர்த்தபதி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தலைமை மருத்துவர் வெங்கடாஜலபதி, டாக்டர்கள் சுப்புலட்சுமி, அன்சர்பாத்திமா, ஜெசிமா, பவித்ரா, சிவக்குமார் ஆகியோரிடம் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் உள்ளதா? என்பது குறித்தும், புதிய தலைமை மருத்துவமனை அமைய உள்ள இடம், அதற்கான பூர்வாங்க பணிகள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார். நாய்கள் தொல்லையை தடுக்க நகராட்சி துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அங்கு துணை இயக்குனர் இல்லாததால் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாபநாசம் அகஸ்தியர் அருவியில் உள்ளூர்வாசிகளை மட்டும் நுழைவு கட்டணம் இல்லாமல் குளிக்க அனுமதிப்பது, அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலையை சீரமைத்தல் உள்ளிட்டவை குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் அம்பை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயபாலாஜி, நகர செயலாளர் விக்கிரமசிங்கபுரம் கண்ணன், மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, நகராட்சி கவுன்சிலர் மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் பிராங்களின், அடையகருங்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவர் மதனகிருஷ்ணன், வக்கீல் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்