ஆழ்வார்திருநகரியில் ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
ஆழ்வார்திருநகரியில் ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.;
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கோவிலில் கணபதி ஹோமம், யாக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்ப அலங்காரத்துடன் நெய்வேத்தியத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றது.