ஆழ்வார்திருநகரி யூனியன் பகுதியில்ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அரசு திட்ட பணிகள் தொடக்கம்

ஆழ்வார்திருநகரி யூனியன் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அரசு திட்ட பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-12 18:45 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பிலான அரசு திட்ட பணிகளை நேற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

ரேஷன்கடைக்கு அடிக்கல்

ஆழ்வார்திருநகரி யூனியன் சுகந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்கோயில் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பேவர்பிளாக் சாலை

இதைத்தொடர்ந்து குரும்பூரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர், புறையூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

கலந்துகொண்டவர்கள்

இந்நிகழ்ச்சிகளில் கூடுதல் கலெக்டர் சுபம்ஞானதேவ் தாக்ரே, முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்