பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.;

Update: 2022-12-29 17:09 GMT

காவேரிப்பாக்கம் அருகே பாலாற்று படுகையை ஒட்டி அமைந்துள்ள திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று பெரும்பாலான கோவில்களில் உற்சவர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனால் இந்த கோவிலில் மட்டும் மூலவரே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்பது இக்கோவிலின் சிறப்பாக இருந்து வருகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மூலிகை, சந்தனம், ஜவ்வாது, வெட்டி வேர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாளை (சனிக்கிழமை) மாலை பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனையடுத்து ஆங்கில புத்தாண்டு அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று இரவு 8 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.

2-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு பெருமாள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள், பொது மக்கள், விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்