முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கடையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.;
கடையம்:
கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியில் 50-வது ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் பொன்விழா ஆண்டு நடைபெற்றது. 1972-1973 ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு கல்வி பயின்ற மாணவர்கள் சுமார் 40 பேர் கலந்துகொண்டு தங்களுக்கு பயிற்றுவித்த முன்னாள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். மேலும் தங்களது பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி ராஜேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் மீரா மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் தாமோதரன், திரிகூடபதி, சிவசுப்பிரமணியன் மற்றும் நூலகர் ஆண்டியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.