ஓ.பன்னீர்செல்வம் அணியில் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர்

வாசுதேவநல்லூரில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர்.

Update: 2022-12-02 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரில் உள்ள அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் சிவகிரி பேரூர் கழக அ.ம.மு.க. நிர்வாகிகள் பொட்டல் கருப்பையா மாவட்ட விவசாய அணி எஸ்.எஸ்.மணியன், ஒன்றிய அண்ணா தொழிற்சங்கம் நாகராஜன், வாசுதேவநல்லூர் மாணவரணி துணை செயலாளர் சவுந்தரராஜன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கோவிந்தராஜன், வார்டு செயலாளர் அய்யனார், 8-வது வார்டு செயலாளர் பிச்சை, அவைத்தலைவர் கணேசன், வடக்கு சத்திரம் 18-வது வார்டு செயலாளர் செல்வம், 1-வது வார்டு செயலாளர் செல்வகுமார், அண்ணா தொழிற்சங்கம் கே.ராஜன், 6-வது வார்டு செயற்குழு சண்முகராஜன், நிர்வாகிகள் காளியப்பன், குமரேசன், தி.மு.க. உறுப்பினர் சசிகுமார் உள்பட சுமார் 50 பேர் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்தி பாண்டியனை சந்தித்து அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைத்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் கழகச் செயலாளர் காசிராஜன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஹரிஹர சிவா, நாரணாபுரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏ.சாமிநாதன், ஜான் பிரிட்டோ நாரணாபுரம் கிளைக் கழக செயலாளர் மாடசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்