குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது

Update: 2022-10-14 18:45 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையினால் நேற்று முன்தினம் இரவு மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதை தொடர்ந்து குற்றாலத்துக்கு வந்த குறைவான சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்