ராமலிங்கசாமி கோவில் திருப்பணிக்கு ரூ.61 லட்சம் ஒதுக்கீடு
ராமலிங்கசாமி கோவில் திருப்பணிக்கு ரூ.61 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம் பகுதியில் ராமலிங்கசாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோவிலுக்கு திருப்பணி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்த கோவிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.61 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பணியை முன்னிட்டு கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாலாலய விழா நடக்கிறது. இந்த விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.