நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது;

Update: 2024-03-21 09:29 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது .வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தமிழகத்தில் இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை மறுநாள் பிற்பகல் 12 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்