அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2022-10-06 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரி சுங்கச்சாவடி பணியாளர்கள் நேற்று தொடர்ந்து 6-து நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் சுங்கச்சாவடியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடி பணியாளர்களை மீண்டும் அதே இடத்தில் பணியாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சுங்க சாவடி பணியாளர்களுக்கு ஆதரவாக கண்டன உரையாற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்