அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு: ஒதுக்கீடு பெற்ற இடங்களில் சேராதவர்கள் 'நீட்' தேர்வு எழுத தடை

அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு: ஒதுக்கீடு பெற்ற இடங்களில் சேராதவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத தடை மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு.

Update: 2023-07-20 19:11 GMT

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அவசியம். அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

ஜிப்மர், எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு 15 சதவீத இடங்கள் ஆகியவற்றுக்கு மருத்துவ கலந்தாய்வு குழு (எம்.சி.சி.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அகில இந்திய அளவில் நடத்துகிறது.

3 சுற்றுகளாக நடக்கும் இந்த கலந்தாய்வு நேற்று தொடங்கி இருக்கிறது. அதில் நிரப்பப்படாத இடங்கள் கடைசியாக இறுதிச் சுற்றில் நிரப்பப்பட இருக்கின்றன. அந்த வகையில் நேற்று தொடங்கிய இந்த கலந்தாய்வு வருகிற செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கலந்தாய்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் விவரம் வருமாறு:-

முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்தவர்கள், 3-வது சுற்று வரை அதனை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு முன்பு வரை 2-வது சுற்று வரை மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.

காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கு பெற்று ஒதுக்கீடு பெற்றவர் அந்த இடங்களில் சேராமல் போனால் அந்த நபருக்கு ஓராண்டு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு இருந்த முந்தைய விதிகளில் 2 ஆண்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முன்பு நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கலந்தாய்வு முடிவுக்குப் பிறகு மீதமுள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்த நடைமுறை இந்த ஆண்டு மாற்றப்பட்டு, காலியிடங்கள் திருப்பி அளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்