அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்-கலெக்டரிடம் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. மனு

பூலாங்குளம் கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.

Update: 2023-06-05 19:00 GMT

தென்காசி:

ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை அவரது அலுவலகத்தில் பொதுமக்களுடன் சென்று சந்தித்து தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார். அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் யூனியன் கீழக்கடையம் ஊராட்சி கடையம்-முக்கூடல் சாலையில் ரெயில்வே கேட் முதல் ரெயில்நிலையம் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்துத்தர வேண்டும். கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாங்குளம் கிராமப்பகுதியில் உடனடியாக ஜல்ஜீவன் மிஷன் நீர்ஆதார திட்டத்தின் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு நடப்பு ஆண்டிலேயே வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்