சென்னையில் 14-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 33 ஊராட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும்-கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் 14-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்திலுள்ள 33 ஊராட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-09-11 18:16 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய கூட்டம் தா.பழூர் ஊராட்சி மன்ற அலுவலக கூட்ட மன்றத்தில் நேற்று நடைபெற்றது. சுத்தமல்லி ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவருமான சக்திவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சாத்தம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், ஒருங்கிணைப்பாளர் அய்யனார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீபுரந்தான் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 14-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தா.பழூர் ஒன்றியத்திலுள்ள 33 ஊராட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக காசாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வரவேற்றார். முடிவில் அணைக்குடம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்