செல்போன்களில் ஒலித்த அபாய எச்சரிக்கை ஒலி
பேரிடர் காலங்களில் அவசர கால தகவல் அளிக்க ஒத்திகைக்காக செல்போன்களில் அபாய எச்சரிக்கை ஒலி ஒலித்தது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
பேரிடர் அவசர நிலை குறித்து நாடு முழுவதும் செல்போன் மூலம் எச்சரிக்கை செய்யும் புதிய திட்டம் நேற்று சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை ஆகியவை இணைந்து பேரிடர் காலங்களில் மக்களை உஷார்படுத்துவதற்காக செல்போன் மூலமாக எச்சரிக்கை செய்வதே இந்த புதிய திட்டத்தின் நோக்கம்.
இந்த செல் ஒலிபரப்பு எச்சரிக்கை என்பது தகவல் தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்படும் என்றும், குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட செல்போன் கோபுரத்தில் இருந்து அந்தந்த பகுதியில் உள்ள அனைத்து செல்போன்களுக்கும் இயற்கை இடர்பாடு பற்றிய எச்சரிக்கை ஒரே நேரத்தில் விடுக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்கள் பீதி
அதன்படி நேற்று மதியம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளவர்களின் செல்போன்களில் எச்சரிக்கை ஒலி ஒலித்தது. மேலும் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியும் வந்தது. இதனால் பலர் பீதி அடைந்தனர். தங்களது செல்போனில் வைரஸ் ஊடுருவி விட்டதோ, செல்போன் செயல் இழந்து விட்டதோ? என்று அச்சப்பட்டனர்.
பின்னர் அது பேரிடர் எச்சரிக்கை தொடர்பான சோதனை என்று தெரிந்தபிறகே நிம்மதி அடைந்தனர்.
அச்சமடைய வேண்டாம்
இது குறித்து கள்ளபேரிடர் காலங்களில் அவசர கால தகவல் அளிக்க ஒத்திகைக்காக செல்போன்களில் அபாய எச்சரிக்கை ஒலி ஒலித்தது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைதொடர்புத் துறை ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர்கால எச்சரிக்கை குறுஞ்செய்தி செய்தி செல்போனுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பேரிடர்கால எச்சரிக்கை குறுஞ்செய்தி தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடையவோ, அச்சமடையவோ வேண்டாம். இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம். பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இச்சோதனை நடைபெறுகிறது. எனவே மாவட்ட இலவச தொலைபேசி எண் 1077-ல் பொதுமக்கள் யாரும் தொடர்பு கொள்ள தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.