ஆற்றில் இறங்கிய அழகர்

சித்ரா பவுா்ணமி விழாவினை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2023-05-05 19:34 GMT

மாவட்டம் முழுவதும் சித்ரா பவுா்ணமி விழாவினை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்ரா பவுர்ணமி

விருதுநகர் அருகே செந்நெல்குடி கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த ஸ்ரீதேவி- பூதேவி, வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று அழகர் கவுசிகமா ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் போது செந்நெல்குடி கிராமத்திலிருந்து கொண்டு செல்லப்படும் சுவாமியின் வஸ்திரங்கள் அங்கு அழகரின் பாதத்தில் வைத்து வழிபட்டு பின்னர் அங்கிருந்து கொண்டு வந்து செந்நெல்குடியில் அழகருக்கு அணிவித்து கவுசிகமா ஆற்றில் இறங்குவது ஐதீகம். இந்த ஆண்டும் கோவிலில் இருந்து அழகராக எழுந்தருளிய வெங்கடாஜலபதி பல்வேறு மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பில் உள்ள சேது நாராயண பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதையடுத்து பெருமாள் ஆனவர் கள்ளழகராக அவதரித்து குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் கள்ளழகர் அர்ஜுனா நதிக்கரைக்கு சென்றார். பக்தர்கள் அவரை எதிர்சேவை செய்து வரவேற்று ஆற்றுக்குள் இறக்கினர். ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மண்டகப்படியில் எழுந்தருளினார்.

சாத்தூர்

சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சாத்தூர் வைப்பாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்