ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-18 19:00 GMT

நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். உதவி தலைவர்கள் சுப்பிரமணியன், பிரான்சிஸ் சிவராஜன், வானமாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

போக்குவரத்து ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிசு பணிகளை உடனே நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களின் பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் உலகநாதன், செயலாளர்கள் குமாரசாமி, காளிராஜ், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்