ஏ.ஐ.டி.யு.சி. கூட்டம்

கரூரில் ஏ.ஐ.டி.யு.சி. கூட்டம் நடந்தது.;

Update: 2022-11-21 18:40 GMT

கரூரில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வடிவேலன் மாநில குழு முடிவுகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாநில தலைமை கொடுக்கும் தேதியில் மாவட்ட மாநாடு நடத்துவது. 3.12.2022-ல் நடைபெறும் ஏ.ஐ.டி.யு.சி. மாநில மாநாட்டு பேரணியில் கரூர் மாவட்டத்தின் சார்பில் 100 பேர் பங்கு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் நாட்ராயன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை செயலாளர் கலாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்