விமான நிலைய விரிவாக்க பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.;

Update: 2023-04-29 19:00 GMT

இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தற்போது விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் புதிய ஓடுபாதை அமைத்தல், புதிய முனையக் கட்டிடம், தொழில்நுட்ப பிரிவு, கட்டுப்பாட்டு கோபுரம், புதிய தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த விரிவாக்க பணிகளை நேற்று கனிமொழி எம்.பி. நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத், விமான நிலைய மேலாளர் ஜெயராமன், உதவி மேலாளர் பிரிட்டோ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்