சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா
சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா நடைபெற்றது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் வழியடிமை கொண்ட நாயகி உடனுறை சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசுத் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து நேற்று வரை 10 நாட்கள் நடைபெற்றது. விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலாவும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. 8-ம் திருநாளில் நடராஜர் வெள்ளை சாத்தி புறப்பாடும், பச்சை சாத்தி புறப்பாடும் நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலாவும், மதியம் 12.30 மணிக்கு பாபநாசத்தில் ஐப்பசி விசு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயலர் (பொறுப்பு) முருகன், தக்கார் ராம்குமார், ஆய்வாளர் கோமதி மற்றும் நிர்வாகத்தினர், சமுதாய நிர்வாகிகள் செய்திருந்தனர்.